3 முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ.. நடந்தது என்ன? வெளியான காரணம்!

அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். 

3 முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ.. நடந்தது என்ன? வெளியான காரணம்!

இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், ஹாட்ரிக் சாதனை படைக்கும் நோக்கத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி நவம்பர் மாதம் செல்ல உள்ளது. 

இதனையடுத்து, இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை தயார்படுத்துவதற்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். 

வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் துலீப் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டு 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இராணி கோப்பை தொடரில் ஆர்ஸ்தீப் சிங் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஆல்ரவுண்டர் ரியான் பராக் உள்ளிட்டவர்களும் இராணி கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை.

இதை போன்று துலீப் கோப்பை தொடரில் விளையாடிய சிவம் துபேவுக்கும் இராணி கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சிறப்பாக விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்குறியாகி உள்ளது.

எனினும், இராணி கோப்பை தொடர் நடைபெற்ற அடுத்த நாளே, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் சஞ்சு சாம்சன், சிவம் துபே ரியான் பராக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளதன் காரணமாகவே இராணி கோப்பை டெஸ்ட் தொடரில் இந்த நான்கு வீரர்களும் சேர்க்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதேவேளை, இராணி கோப்பை தொடரில் இதர இந்திய அணி கேப்டனாக ருதுராஜ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp