ஏமாற்றம் அளித்த சஞ்சு சாம்சன்... கொந்தளித்த ரசிகர்கள்.. நடந்தது என்ன?
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றார்.
தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பில் அவர் மோசமாக சொதப்பி ஏமாற்றம் அளித்த நிலையில், ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. 162 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் ஆடத் தொடங்கியது. சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றதோடு, துவக்க வீரராகவும் களமிறங்கினார்.
ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் துவக்கம் அளித்தனர். முதல் ஓவரில் மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் போட்டி தாமதமானது.
பின்னர் எட்டு ஓவர்களில் 74 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவர் முழுவதும் ஜெய்ஸ்வால் சந்தித்து, 12 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தீக்ஷனா வீசிய பந்தை சரியாக கணித்து ஆட முடியாமல் தடுமாறிய சஞ்சு சாம்சன் பவுல்ட் அவுட் ஆகி இருந்தார்.
இதை அடுத்து, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சஞ்சு சாம்சன் மோசமாக ஆடி தனது விக்கெட்டை சொற்ப ரன்களுக்கு பறி கொடுக்கிறார். என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.