இந்திய அணியில் இருந்து நீக்கப்படவுள்ள தமிழக வீரர்? என்ன செய்ய போகிறார் கவுதம் கம்பீர்?
இருவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டர் ஆவார். வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி போட்டிக்கான பிளேயிங் லெவனில் இரண்டு தமிழக வீரர்களில் ஒருவரை நீக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடி இருந்தனர்.
இருவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டர் ஆவார். வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
எனினும், முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்தது மட்டுமே சிறிய பின்னடைவாக அமைந்தது. தற்போது மாற்று வீரர்களாக உள்ள நால்வரில் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் உள்ளார்.
முன்னதாக, அவர் சர்வதேச டி20 போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தமையை சுட்டிக்காட்டலாம்.
அதன் பின் அவருக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவருக்கு அணியில் இடமளிக்க, வாஷிங்டன் சுந்தர் அல்லது வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனினும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிளேயிங் லெவனை மாற்ற விரும்ப மாட்டார் என்பதால் இந்த மாற்றம் நடக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகின்றது.
அதேபோல, மாற்று வீரர்களாக இருக்கும் திலக் வர்மா மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, , நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங்.