எனக்கு அப்படி ஒரு கணக்கே இல்லை... சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா அறிக்கை!
இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.

பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோ பிரச்சனை அண்மைய காலமாக வெளியாகி பிரச்சினையா உருவெடுத்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து AI தொழிற்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், சமூக வலைதளங்களில் எனது டீப் ஃபேக் புகைப்படங்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. எக்ஸ் தளத்தில் எனது பெயரில் போலியான கணக்குகள் இயங்கி வருவதை பார்க்க முடிந்தது. அந்த கணக்கிலேயே அது பொய்யான கணக்கு என்று கூறப்பட்டிருந்தாலும் கூட, அந்த கணக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள் என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு எக்ஸ் தளத்தில் எந்த கணக்கும் இல்லை. இதனால் எக்ஸ் நிர்வாகம், சம்மந்தப்பட்ட கணக்குகளை அறிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.