இளம் வீரரின் செயலால் ரோஹித் சர்மா அதிருப்தி... கடும் கோபத்துடன் பிசிசிஐக்கு கடிதம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வெற்றியைப் பெற யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சர்பரஸ் கான் ஆகியோர் தான் முக்கிய காரணம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வெற்றியைப் பெற யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சர்பரஸ் கான் ஆகியோர் தான் முக்கிய காரணம்.
யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சர்பரஸ் கான் இருவரும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், 26 ஓவர்களிலேயே 172 ரன்களை குவித்து, பேஸ் பால் ஆட்டத்திற்கே டப் கொடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்த நிலையில், சர்பரஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன்களை அடித்து, அரை சதம் எடுத்து, இந்திய அணியில் தனது இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார்.
யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 196 ரன்களில் இருந்தபோது, ஸ்வீப் கவர் திசையில் பந்தை அடித்தார். பவுண்டரி லைன் வரை சென்ற அந்த பந்தில் இரண்டு ரன்களை எடுக்கும் அளவுக்கு நேரம் இருந்தது.
ஆனால், ஜெய்ஷ்வால் ஒரு ரன்னை மட்டும் ஓடிய நிலையில், அதற்கு சர்பரஸ் கான் அதிருப்தியை வெளிப்படுத்தி திட்டினார். அடுத்து, ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்தப் பிறகு, சக மும்பை அணி வீரரான சர்பரஸ் கானும் இதனை கொண்டாடினார்.
எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த சரித்திரம்
அடுத்து, சர்பரஸ் கானும் அரை சதம் கடந்தப் பிறகு, இந்தியா 430/4 ரன்களுக்கு டிக்ளேர் அறிவித்தது. இறுதியில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், களத்தில் யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை திட்டியதற்கு ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்வால் ஏற்கனவே, முகுது வலி பிரச்சினையால் அவதிப்பட்டிருந்தார். அது தெரிந்தும், சர்பரஸ் கான் அவரை ரன் ஓட அழைத்தது ஏன் என சர்பரஸ் கானை ரோஹித் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் களத்திலேயே கீழே சாய்ந்து, பிறகு மீண்டும் பேட்டிங் ஆடி இரட்டை சதம் அடித்தது குறித்தும், குறிப்பாக, அவர் களத்தில் ஏன் கீழே சாய்ந்தார் என்பது குறித்தும், பிசிசிஐ விளக்கம் கேட்ட நிலையில், ரோஹித் அதுகுறித்து விரிவான விளக்கத்துடன் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.