இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலி? அணியில் தமிழக வீரருக்கு இடம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள தலைவலி? அணியில் தமிழக வீரருக்கு இடம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியிருப்பதால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.

அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல், ஜடேஜா அஸ்வின் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற நிலையில், 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் இரண்டாவது டெஸ்டில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கில்லுக்கு பதிலாக சர்பராஸ் கான் களமிறங்கிய நிலையில் தற்போது கில் அணிக்கு திரும்பி உள்ள நிலையில், கேஎல் ராகுலா அல்லது சர்பராஸ்கானா  நீக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அத்துடன், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான புனே ஆடுகளத்தில், இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அக்சர் பட்டேல் அல்லது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவாரா என்று தெரியவில்லை.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது சிராஜ் விக்கெட் எடுக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு அல்லது மூன்று மாற்றங்களாவது நடக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் லெவன் 

  1. ரோகித் சர்மா
  2. ஜெய்ஸ்வால்
  3. சுப்மன் கில்
  4. விராட் கோலி
  5. சர்ஃபராஸ் கான்/கேஎல் ராகுல்
  6. ரிஷப் பண்ட்
  7. ஜடேஜா
  8. அஸ்வின்
  9. குல்தீப் யாதவ்/அக்சர் பட்டேல் 
  10. பும்ரா
  11. முகமது சிராஜ்/ ஆகாஷ் தீப்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp