பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 6ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், மே 7ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.