ரசிகரை மோசமான முறையில் நடத்திய பாபர் அசாம்... இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது தோளில் கை வைக்க முயன்ற ஒரு ரசிகரை, பாபர் அசாம் உடனே முகம் சுழித்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பின்னர், பாகிஸ்தான் அணி மற்றும் பாபர் அசாம் மீது ரசிகர்கள் விமர்சம் முன்வைத்து வருகின்றனர்.
அணியின் குறைவான வெற்றிகள் மற்றும் பாபர் அசாமின் 16 இன்னிங்ஸ்களில் ஒரே அரைசதம் கூட அடிக்காமலிருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், கேப்டன் பதவியிலிருந்து நீக்கம் மற்றும் ஒருநாள், டி20 அணியில் இருந்து பாபர் அசாமை நீக்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க, பாபர் அசாமிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட பாபர் அசாம், ரசிகருடன் போஸ் கொடுத்தார். அப்போது அந்த ரசிகர்கள் தனது கைகளை பாபர் அசாமின் தோளில் வைக்க முயற்சித்துள்ளார்.
இதனால் டென்ஷனான பாபர் அசாம் உடனடியாக முகம் சுழித்து, தொடதீர்கள் என்று சைகை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீரர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை கொடுப்பார்கள். அவர்கள் விளையாடிவிட்டு நடந்து வரும் போது கூட ஏராளமான ரசிகர்கள் வீரர்களின் தோளினை தட்டிக் கொடுத்து ஓய்வறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் பாபர் அசாம் ரசிகர் ஒருவர் தன்னை தொடவே அனுமதிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.