மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்

இலங்கையின் மூத்த  பத்திரிகையாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன் இன்று காலமானார்.

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்

இலங்கையின் மூத்த  பத்திரிகையாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன் இன்று காலமானார்.

விக்டர் ஐவன், இலங்கையின் முதலாவது புலனாய்வு வார இதழான ராவய பத்திரிகையை 1985களில் ஆரம்பித்து அதன் வௌியீட்டாளராகவும், ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார்.

பல்வேறு அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.

ராவய பத்திரிகை வௌியீடு நிறுத்தப்பட்ட பின்னரும், அவர் இலங்கையின் அரசியல் மற்றும் ஊடகத்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய நபராக மாறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று சுகவீனம் மற்றும் முதுமை காரணமாக 75ஆவது வயதில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp