விராட் கோலியோட மாஸ் தெரியனும்னா... பாகிஸ்தானுக்கு வந்து பாருங்க.. அப்ரிடி அழைப்பு!
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்திய அணி வீரர்கள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.
எனினும், இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்க இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை.
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிசிஐ தரப்பில் ஐசிசியிடம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி பேசுகையில், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவேற்கின்றோம்.
மேலும் படிக்க | கம்பீரால் ஏற்பட்டுள்ள மாற்றம்... இந்திய அணிக்கு வரும் வீரர்கள்.. சிக்கலில் ரோகித் சர்மா!
2005ஆம் ஆண்டு இந்தியாவிற்கு நாங்கள் பயணித்த போது, அவ்வளவு மரியாதையை பெற்றிருக்கிறோம். என்னை பொறுத்தவரை அரசியலை விளையாட்டுடன் இணைக்க தேவையில்லை.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
விராட் கோலி மட்டும் ஒருமுறை பாகிஸ்தான் வந்தால், அவர் இந்தியாவில் கிடைத்த அன்பையே மறந்துவிடுவார். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை கொண்டாடி வருகின்றனர்.
எனக்கும் விராட் கோலி மிகவும் பிடித்த வீரர். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மைதானங்களில் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.