பங்களாதேஷ் கேப்டன் மீது தாக்குதல்... உலகக் கிண்ண தோல்வியால் ரசிகர்கள் கோபம்? உண்மை என்ன?

பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

பங்களாதேஷ் கேப்டன் மீது தாக்குதல்... உலகக் கிண்ண தோல்வியால் ரசிகர்கள் கோபம்? உண்மை என்ன?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனை ரசிகர்கள் தாக்கும் வீடியோ உண்மை இல்லை என  கூறப்படுகிறது.  2023 உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. 

லீக் சுற்றில் பத்து அணிகள் இடம் பெற்ற நிலையில், பங்களாதேஷ் அணியால் எட்டாவது இடம் மட்டுமே பெற முடிந்தது. பங்களாதேஷ் அணி உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். 

பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

அது மட்டுமின்றி, உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன் மூத்த வீரர் தமிம் இக்பாலை அணியை விட்டு நீக்க திரை மறைவில் பெரும் போராட்டம் நடத்தினார் ஷகிப் அல் ஹசன். 

தமிம் இக்பால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவேன் என்றெல்லாம் கூறி அவரை நீக்க வைத்தார். அப்போதே பங்களாதேஷ் ரசிகர்கள், ஷகிப் அல் ஹசன் மீது பெரும் அதிருப்தி அடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி உலகக்கோப்பை தொடரிலும் சொதப்பியது. அப்போதே சிலர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் அவருக்கு மோசமான வரவேற்பு தான் கிடைக்கும் என கூறி வந்தனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை முடிந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் டாக்கா விமான நிலையத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் சிலர் ஷகிப் அல் ஹசன் சட்டையை பிடித்து இழுத்து அவரை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், உண்மையில் அந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஒன்று. அப்போது அவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது அவர் விமான நிலையத்தில் அடி வாங்குகிறார் என மாற்றி பரப்பி வருகின்றனர். 

உலகக்கோப்பையில் நடந்த சம்பவங்களும் அதற்கேற்ப இருக்கவே, பலரும் இந்த வீடியோவை உண்மை என நம்பி பரப்பி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp