இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட 5 வீரர்கள்... பிசிசிஐ எடுத்த முடிவு.. காரணம் என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டு ஐந்து வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் இருந்து ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டு ஐந்து வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
அதாவது, முன்னதாக நடைபெற்ற வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் பங்கேற்று இருந்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா, ரமன்தீப் சிங், விஜயகுமார் வைசாக், அவேஷ் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகிய ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டு உள்ளமை ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பி உள்ளது.
அவர்களுக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, துருவ் ஜுரல், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதுடன், பிசிசிஐ ஐந்து வீரர்களை மாற்ற முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அணித் தேர்வு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் மனதில் வைத்து நடந்து உள்ளதுடன், அந்த தொடரில் பங்கேற்கும் வாய்ப்புள்ள சில வீரர்களுக்கு இந்த டி20 அணியிலும் வாய்ப்பு அளித்து அவர்களின் திறமையை பரிசோதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு திரும்ப வரும் முகமது ஷமி, சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு முன் அதிக போட்டி அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த டி20 தொடரில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அக்சர் பட்டேலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அத்துடன், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகிய அதிரடி வீரர்கள் இடம் பெற்றுள்ளதுடன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளனர்.
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி
- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்),
- சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்
- அபிஷேக் சர்மா
- திலக் வர்மா
- ஹர்திக் பாண்டியா
- ரிங்கு சிங்
- நிதிஷ் குமார் ரெட்டி
- அக்சர் படேல் (துணை கேப்டன்)
- ஹர்ஷித் ராணா
- அர்ஷ்தீப் சிங்
- முகமது ஷமி
- வருண் சக்கரவர்த்தி
- ரவி பிஷ்னோய்
- வாஷிங்டன் சுந்தர்
- துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்).