சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிகரிக்கப் போகும் பண கஷ்டம்!
சனி நட்சத்திர பெயர்ச்சி: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை அளிப்பவர். சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை அளிப்பவர். சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சனி பகவான் அக்டோபர் 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் இருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்கிறார்.
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சனியும், செவ்வாயும் எதிரி கிரகங்கள். செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நிச்சயம் காணப்படும்.
குறிப்பாக சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியால் பல சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக நிதி நிலையில் மோசமான தாக்கம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் பல தடைகளை சந்திக்கலாம். செலவுகள் அதிகமாகும். அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். வேலை குறித்த கவலை அதிகரிக்கும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதீர்கள். இல்லாவிட்டால், அதுவே பெரிய பிரச்சனையைக் கொண்டு வரும். முக்கியமாக அக்டோபர் 15-க்கு பின் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது சற்று மோசமான பலன்களை வழங்கும். அக்டோபர் 15-க்கு பின் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையிலும் மோசமான விளைவு ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்கள், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். குடும்பத்தினருடன் சண்டைகள் அதிகம் வரலாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். யார் பேச்சையும் கேட்டு பணத்தை எதிலும் முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றமடைந்து, நிதி இழப்பை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். காதல் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பழைய நோய் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)