பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

வெறும், 72 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இப்படி, வெற்றிக்கு காரணமாக இருந்ததால், இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இருப்பினும், இப்போட்டியில் இந்திய அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை. தற்போது, மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

பும்ராவிடம் எந்த பிரச்சினையும் இல்லை. இந்திய அணி வேகப்பந்து வீச்சு துறையானது, முழுக்க முழுக்க பும்ராவை நம்பி இருப்பதுதான், இங்கு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. மற்ற பௌலர்களால் விக்கெட்களை வீழ்த்த முடியாத நேரத்தில், பும்ராவுக்கு அதிக ஓவர்களை வழங்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்த பிரச்சினையை காரணம் காட்டி பேசியுள்ளார். அதில், ‘‘டெஸ்டில், பேட்டர்கள் அட்டாக் செய்து ஆட மாட்டார்கள். 

ஒருசில நேரத்தில், தொடர்ந்து அதிக ஓவர்களை வீசும் நெருக்கடி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்படும். குறிப்பாக, பும்ராவின் நிலைமை, சொல்லவே தேவையில்லை. இந்திய அணியில், அவர் மட்டும்தான், வேகப்பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத நேரத்தில், பும்ராவுக்கு அதிக ஓவர்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில், ஸ்பின்னர்கள் மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றபோது, ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளராக பும்ராவைதான் ஆட வைக்க விரும்புகிறார்கள். 

வேகத்திற்கு ஒத்துழைக்காத மைதானத்திலும் பும்ரா அதிக விக்கெட்களை எடுக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதனால், பும்ரா கூடுதல் ஒழைப்பை போட்டு விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், இனி வரும் காலகட்டத்தில், பும்ராவுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அக்தர், ‘‘தற்போது, பும்ரா இடத்தில் நான் இருந்தால், நிச்சயம் டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிடுவேன். வெள்ளைப் பந்து தொடர்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவேன். 

டெஸ்டில், பும்ரா இதேபோல் தொடர்ந்து செயல்பட்டால், காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், பும்ராவுக்கு இணையான ஒரு வேகப்பந்து வீச்சாளரை, இந்திய அணி நிர்வாகம் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp