ஹர்திக் பாண்டியாவால் மருத்துவமனைக்கு ஓடிய வீரர்.. நடந்தது என்ன?

கடைசி ஐந்து ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ரன் குவித்த நிலையில் கடைசி ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார். 

ஹர்திக் பாண்டியாவால் மருத்துவமனைக்கு ஓடிய வீரர்.. நடந்தது என்ன?

2024 டி20 உலக கோப்பையின் பயிற்சிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 23, சஞ்சு சாம்சன் 1, ரிஷப் பண்ட் 53, சூர்யகுமார் யாதவ் 31, சிவம் துபே 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஐந்து ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ரன் குவித்த நிலையில் கடைசி ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார். 

இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் ஹர்திக் பாண்டியா பந்தை நேராக அடிக்க, வேகமாக வந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் ஷோரிஃபுல் இஸ்லாம்.

அப்போது அவரது உள்ளங்கையில் பந்து பட்டதுடன், வலியில் துடித்த நிலையில், வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் ஓடிவந்து அவரை பரிசோதித்தார். 

இதன்போது, அவருக்கு கையில் பலமாக அடிபட்டு இருப்பதை உறுதி செய்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

இதனையடுத்து, வங்கதேச அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் ஷோரிஃபுல் இஸ்லாம், நேற்று ஏற்பட்ட காயத்தால் இனி விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பயிற்சி போட்டியில் 3.5 ஓவர்கள் பந்து வீசிய ஷோரிஃபுல் இஸ்லாம் 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். 

அத்துடன், ஒரு ஓவருக்கு சராசரியாக 6.8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், நல்ல பந்துவீச்சாளரை இழக்கும் நிலையில் உள்ளது வங்கதேசம். 

இந்த போட்டியில் இந்தியா 182 ரன்கள் எடுத்த நிலையில்,  வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுக்க, 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp