எனக்கா அணியில் இடமில்லை... இப்ப பதில் சொல்லுங்க பார்போம்... ஸ்ரேயாஸ் ஐயரின் ட்விஸ்ட்!
ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பேசி வந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை எனக் கூறி அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று மும்பை அணி சார்பில் ஆடி வருகிறார்.
ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸிலும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தன்னை அணியில் இருந்து நீக்கியதற்கு பதிலடி கொடுக்க நினைத்த அவர் அதிரடி ஆட்டம் ஆடி உள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்து உள்ள நிலையில் அடுத்த ஜூலை மாதம் இந்திய அணி ஆட உள்ள டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.