ஜாம்பவான்களின் சாதனையை சுக்குநூறாக்கிய சுப்மன் கில்.. ஆனாலும் சச்சினை தொடவே முடியாது!
ஆனால் இதே 24 வயதில் சச்சின் டெண்டுல்கர் 30 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 21 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

13 இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து சுப்மன் கில் திரும்பி வந்திருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடமான புஜாராவின் இடத்தை காலி செய்த கில், கடந்த 13 இன்னிங்ஸ்களாக அரை சதத்தை கடக்கமால் தடுமாறி வந்தார்.
இதனால் கில்லுக்கு எதிராக பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அவருடைய இடம் பறிபோகும் நிலை காணப்பட்டதுடன், இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.
132 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்க சதம் அடித்தார். இதனையடுத்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
சோலி முடிஞ்சது... இனி வாய்பே இல்ல... புஜாராவுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. என்ன நடந்தது?
24 வயதே ஆன கில், ஒரு நாள் போட்டிகளில் ஆறு சதமும், டெஸ்ட் போட்டியில் மூன்று சதமும் டி20 போட்டியில் ஒரு சதமும் என சர்வதேச கிரிக்கெட்டில் 10 சதம் அடித்திருக்கிறார்.
ஆனால் இதே 24 வயதில் சச்சின் டெண்டுல்கர் 30 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 21 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
கில் பத்து சதம் அடித்து மூன்றாவது இடத்திலும் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தலா 9 சதம் அடித்து நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள்.
அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா 7 சதம் அடித்து முதல் இடத்திலும் கோலி,மாயங் அகர்வால் தலா நான்கு சதம் அடித்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் ராகுல், ரிஷப் பன்ட், ரஹானே ஆகியோர் தலா மூன்று சதம் அடித்திருக்கிறார்கள். கில்லின் இந்த சதம் மூலம் அணியில் உள்ள அவருடைய இடம் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.