ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் அசத்தல்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தை பிடித்து உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் அசத்தல்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தை பிடித்து உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நட்சத்திர வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் ஷுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த ஷுப்மன் கில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் 796 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும், விராட் கோலி ஆறாவது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 9வது இடத்திலும் உள்ளனர்.

பாபர் அசாமுக்கும், ஷுப்மன் கில்லுக்கும் 23 புள்ளிகள் வித்தியாசம் இருக்கும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp