ரோகித்திடம் சரணடைந்த சுப்மன் கில்.. என்ன நடந்தது தெரியுமா?
ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்தில் தலை காட்டவில்லை.
டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் உள்ளதுடன், இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், போட்டிகளை நேரில் காண சுப்மன் கில் வரவில்லை.
ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்தில் தலை காட்டவில்லை.
சாரா டெண்டுல்கரும் அமெரிக்கா வந்த நிலையில், காதலியுடன் சுப்மன் கில் நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் குரூப் சுற்றுடன் சுப்மன் கில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியது.
ரிங்கு சிங், கலீல் அஹ்மத் இந்திய அணியுடன் தென்னாபிரிக்கா செல்கின்றனர். ஆவேஷ் கான் மற்றும் சுப்மன் கில் நாடு திரும்புகிறார்கள் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாகவே இந்தியாவுக்கு திரும்பவுள்ளதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதில் இருந்து சுப்மன் கில் விலகினார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை வறுத்து எடுத்தனர்.
சுப்மன் கில் - ரோகித் சம்ரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நானும் சமைராவும் ரோகித் சர்மாவிடம் இருந்து ஒழுக்கத்தை கற்று வருகிறோம் என்று அந்த பதிவில் எழுதியிருக்கிறார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரசிகர்கள் சுப்மன் கில்லை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.