சதம் அடித்து அதிரடி காட்டிய சுப்மன் கில்... கலங்கிப் போன வங்கதேசம்
இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் இரண்டு சிக்ஸர்களை அதிரடியாக அடித்து அரை சதம் கடந்தார். இதை அடுத்து இந்திய அணி 350 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.
சுப்மன் கில்லுடன் ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பண்ட்டும் அரை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. அடுத்த ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா மோசமான துவக்கம் அளித்தனர்.
ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 17 ரன்களுடன் நடையை கட்டினார்.
இந்திய அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி அபாரமாக ஆடினர்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிரடி ஆட்டம் ஆடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து 109 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆன சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்க்ஸில் சதம் அடித்து வங்கதேச அணியை நிலைகுலைய வைத்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.