சுப்மன் கில் படைத்த மாபெரும் சாதனை... ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 8ஆவது அதிவேக சதம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஷிகர் தவான், கவுதம் கம்பீர் போன்ற வீரர்களின் சாதனைகளை அவர் முறியடித்து இந்திய அணிக்காக அதிவேகமாக முதல் 8 ஒருநாள் போட்டி சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரராக இறங்கிய சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 41 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தனர்.
சுப்மன் கில் அடித்த இந்த சதம் அவரது எட்டாவது ஒருநாள் போட்டி சதம் என்பதுடன், ஒருநாள் போட்டிகளில் 51 இன்னிங்ஸ்களில் அவர் எட்டு சதங்களை விளாசி இருக்கின்றார்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் 125 பந்துகளில் சதம் அடித்த நிலையில், இது மிக மெதுவான சதம் என்ற சாதனையும் படைத்துள்ளதுடன், இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இதேவேளை, கடைசியாக ஆடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றும் சுப்மன் கில் சதம் சாதனை படைத்துள்ளார்.
கடைசி நான்கு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்களையும், இரண்டு சதங்களையும் அடித்துள்ளதுடன், தற்போது ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.