காயத்தால் விலகிய இளம் வீரர்... அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர்.. கம்பீர் எடுத்த அதிரடி முடிவு! 

ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்ஷன் இரட்டை சதம் அடித்தார். அத்துடன், சௌராஷ்டிரா அணிக்கு எதிரா அரை சதமும் அடித்தார். 

காயத்தால் விலகிய இளம் வீரர்... அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர்.. கம்பீர் எடுத்த அதிரடி முடிவு! 

இந்தியா, மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளதுடன், இந்தியா 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் வெற்றிப்பெற்றால்,  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு, நேரடியாக செல்ல முடியும்.

அதேநேரம், ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் கூட, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்துதான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்திய டெஸ்ட் அணி, தற்போது பங்கேற்று விளையாடி வருவதுடன், இதன்போது ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டதால்,  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அப்போது, கில்லின் கை விரல் எழும்பில், முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தால், முதல் போட்டியில் ஷுப்மன் கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஷுப்மன் கில்லுக்கான மாற்று வீரரை தேர்வு செய்வது குறித்து, பிசிசிஐ ஆவசர ஆலோசனை மேற்கொண்டது. 

அப்போது பேசிய கம்பீர், ‘‘ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக சாய் சுதர்ஷனை அணியில் சேர்க்க விரும்புகிறேன். சுதர்ஷனை சேர்க்க முடியவில்லை என்றால், பேக்கப்பாக தேவ்தத் படிக்கல்லை சேர்த்துக்கொள்ளலாம்’’ எனத் தெரிவித்திருக்கிறார். 

இதற்கு, பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியுள்ளதால், இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்கும் சுதர்ஷன் மற்றும் படிக்கல் இருவரும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்ஷன் இரட்டை சதம் அடித்தார். அத்துடன், சௌராஷ்டிரா அணிக்கு எதிரா அரை சதமும் அடித்தார். 

தேவ்தத் படிக்கல், இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில், தர்மசாலாவில் அறிமுக வீரராக களமிறங்கிய இருந்தார். இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பரஸ் கான் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டனர். 

இதில், கோலிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், சர்பரஸ் கான் ஆகியோரது காயம் குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp