ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் வரலாற்று சாதனை படைத்த சிராஜ் மற்றும் சுப்மன் கில்... கோலியின் நிலை என்ன?
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.
ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியிலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசைக்கான பட்டியலில் இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டும்தான் முதல் இடத்துக்கு வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை கில்லுக்கு கிடைத்து இருக்கின்றது.
ICC தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வேற லெவல் சாதனை படைக்கும் இந்திய அணி!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது 770 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டிகாக் 771 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். டேவிட் வார்னர் 743 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், ரோகித் சர்மா 739 புள்ளிகளுடன் 6வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
பந்துவீச்சாளருக்கான பட்டியலில் 709 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் 694 புள்ளிகளுடன் கேசவ் மஹராஜ் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பாவும், நான்காவது இடத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
இதேநேரம், இந்திய அணியின் வீரர்களான பும்ரா 8வது இடத்திலும் சமி பத்தாவது இடத்திலும் உள்ளனர்.