மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, 2024 ஆம் ஆண்டு அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்து உள்ளார்.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, 2024 ஆம் ஆண்டு அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்து உள்ளார்.

அத்துடன், மகளிர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்து உள்ளதுடன், தொடர்ந்து ஐந்து சர்வதேச இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கும் மேல் அடித்து உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், துவக்க வீராங்கனையாக விளங்கிய ஸ்மிருதி மந்தனா 102 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். 

இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதை அடுத்து இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்துடன், அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா தான் ஆடிய கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து சாதனை படைத்தார்.

மேலும், எந்த ஒரு ஆண்டிலும் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக அவர் சாதனை படைத்ததுடன், 2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 1602 ரன்கள் எடுத்து இருக்கிறார். 

இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் லாரா உல்வார்ட் 1593 ரன்களுடன் உள்ளதுடன், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை நாட் சைவர்-பிரண்ட் இருக்கிறார்.

அவர் 2022 ஆம் ஆண்டில் 1346 ரன்கள் எடுத்த நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனாவே உள்ளார். 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 1291 ரன்கள் எடுத்திருந்தார். 

2022 ஆம் ஆண்டில் அவர் 1290 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை என்பதை அவர் மீண்டும் நிரூபித்தமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp