நீங்க செஞ்சது தவறு... முதல் முறையாக ஜெய்ஷாவுக்கு எதிராக பொங்கிய கங்குலி!

கங்குலி அந்தப் பதவியில் இருந்து சென்ற நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக இருக்கிறார்.

நீங்க செஞ்சது தவறு... முதல் முறையாக ஜெய்ஷாவுக்கு எதிராக பொங்கிய கங்குலி!

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் கங்குலி முதல் முறையாக ஜெயிஷாவுக்கு எதிராக பேசி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தார். அப்போது கங்குலி தலைவர் பதவியில் இருந்தாலும் ஜெய்ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார். 

கங்குலி அந்தப் பதவியில் இருந்து சென்ற நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக இருக்கிறார்.

இவ்வாறான பின்னணியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரஞ்சிப் போட்டியில் விளையாடாததால் அவர்களுடைய இந்திய அணி ஒப்பந்தம் நீக்கப்பட்டதற்கு எதிராக கங்குலி பேசி இருக்கிறார்.

14,098 ரன்கள் அடித்த இந்திய வீரர்.. கடைசிவரை இந்திய அணியில் இடம் இல்லை... அதிருப்தியில் ஓய்வு!

“இஷான் கிஷன் போன்ற வீரர்களிடம் ஜெய்ஷா மற்றும் ரோஜர் பின்னி இல்லையெனில் தேர்வு குழுவினர் கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும்.

இஷான் கிசன் ஒன்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததில்லை. மேலும் வெள்ளை நிற கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இருக்கிறார்.  இந்த ஒரு முறை விளையாடவில்லை என்பதற்காக அவர் ஒரு மோசமான வீரராக மாறிவிட மாட்டார்.

நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களிடம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உடல் தகுதியை பெறுங்கள் என்று கூறியிருந்தேன். ஒரு சில வீரர்களிடம் மட்டும் தான் நான் விளையாட சொல்லவில்லை.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ரஞ்சி போட்டிகள் விளையாடாமல் போவது இதுதான் முதல் முறையா? இதனால் பிசிசிஐ இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும்” - என்று கங்குலி கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp