அரையிறுதியில் பாகிஸ்தான்? சவுரவ் கங்குலி கூறியதுக்கு வேற அர்த்தம்.... இதுதான் காரணமா?
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இடங்களில் உள்ளன.
2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினால் அது பெரிதாக இருக்கும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளமைக்கு வேறு ஒரு தனிப்பட்ட நோக்கமும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இடங்களில் உள்ளன.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே நான்காவது இடத்துக்கு போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில், கங்குலி சொல்வது போல ஒருவேளை பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் அரை இறுதிப் போட்டி நடக்கும் இடம் மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!
தற்போதைய அட்டவணையின்படி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகள் மும்பையில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் கொல்கத்தாவில் மோதும் என்ற நிலை காணப்படுகின்றது.
ஆனால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மற்றொரு அரை இறுதி மும்பைக்கு மாற்றப்படலாம்.
ஏன் என்றால், மும்பையை விட, கொல்கத்தாவில் அதிக ரசிகர்கள் நேரில் போட்டியை காணலாம் என்பது தானாம். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் தலைவர் கங்குலியின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.