நேரலையில் பெண் ரசிகையின் சேட்டை... என்ன நடந்தது தெரியுமா?
தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் எஸ்ஏ20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தனியாக அமர்ந்திருந்த காதல் ஜோடியின் சேட்டையை திடீரென கேமரா மேன் மெயின் ஸ்க்ரீனில் காட்டியது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் எஸ்ஏ20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதல் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக பட்லர் 31 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.
அதன்பின் களமிறங்கிய மும்பை கேப்டவுன் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை விளாசி வெற்றிபெற்றது.
பார்ல் ராயல்ஸ் அணியின் பேட்டிங் போது 14.1 ஓவரில் கேலரில் அமர்ந்திருந்த பெண் ரசிகை கேமராவில் காட்டப்பட்டார்.
உடனே அந்த பெண் ரசிகை, அருகில் அமர்ந்திருந்த நண்பரின் கைகளில் இருந்த பீர் கோப்பையை எடுத்து, ஒரே கல்பில் குடித்து முடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதனை பார்த்த வர்ணனையாளர்கள் உற்சாகத்தில் அதற்கும் சேர்த்து வர்ணனை கொடுக்க அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் ரசிகர்கள் பீர் குடித்து கொண்டே கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.