89 ரன்களில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி... இலங்கை அணி அபார வெற்றி

இரண்டாவது டி20  போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது. 

89 ரன்களில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி... இலங்கை அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இலங்கைக்கு வந்துள்ள நிலையில், டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20  போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது. 

கடந்த போட்டியில் சரியாக விளையாடாத இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 49 பந்தில் 54 ரன்கள், குசால் மெண்டிஸ் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து குசால் பெரேரா 16 பந்தில் 24 ரன்கள், தமிந்து மெண்டிஸ் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோமாரியோ செப்பர்ட் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

முதல் போட்டியில் தோல்வி அடைந்தத இலங்கை அணி பக்கம் அதிர்ஷ்டம் இருக்க டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 40 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் வெறும் 89 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் தரப்பில் தீக்ஷனா, ஹசரங்கா, அசலங்கா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். 

வெல்லாலகே மூன்று விக்கெட் கைப்பற்றினார். இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என சம நிலையில் இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp