இந்தியா இலகுவாக வெற்றிப்பெற இதுதான காரணம் - உண்மையை உடைத்த இலங்கை கேப்டன்

டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 

இந்தியா இலகுவாக வெற்றிப்பெற இதுதான காரணம் - உண்மையை உடைத்த இலங்கை கேப்டன்

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேசி உள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமானதுடன், டி எல் எஸ் முறைப்படி 8 ஓவர்களில் 74 ரன்கள் என்பதாக வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஏமாற்றம் அளித்த சஞ்சு சாம்சன்... கொந்தளித்த ரசிகர்கள்.. நடந்தது என்ன?

ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 6.3 ஓவர்களில் வெற்றி பெற வைத்தனர்.

இந்த நிலையில், மழையால் போட்டி நடந்த மைதானத்தின் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்தது தான் இந்தியா எளிதாக ரன் குவிக்க காரணம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா கூறி இருக்கிறார். 

வானிலை மாற்றம் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எட்டு ஓவர் போட்டியில் இது போன்ற ஈரமான ஆடுகளத்தில் மிக எளிதாக ரன் குவிக்கலாம் என்றார்.

மேலும், தாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 "நாங்கள் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்தது குறித்து எனக்கு ஏமாற்றமாக உள்ளது. எங்களுடைய மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் மிக மோசமாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கில் நிறைய முன்னேற்றத்தை செய்ய வேண்டும். நாங்கள் 15 முதல் 18 ரன்கள் வரை குறைவாகவே எடுத்தோம்.” என்று கூற உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp