அதிரடி காட்டிய இலங்கை அணி... வேற லெவல் சாதனை... 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் நாடு திரும்புகின்றது.
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இங்கிலாந்து அணி 325 ரன்களை சேர்த்தது. இதில், தொடக்க வீரர் பென் டக்கட் 86 ரன்கள் மற்றும் கேப்டன் ஆலிப் போப் 154 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணியின் ஏனைய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இலங்கை பந்து வீச்சில் மிலான் ரத்தினநாயகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. நிஷாங்கா 64 ரன்கள், கேப்டன் தனஞ்செய் செல்வா 69 ரன்கள் மற்றும் குசல் மெண்டிஸ் 64 ரன்கள் ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் அதிகமாக சாதிக்கவில்லை.
இதனால் இலங்கை அணி 263 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்து வீச்சில் ஜாஸ் ஹால் மற்றும் ஆலிஸ் ஸ்டோன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
62 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில், ஜாமி ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார், மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஆடவில்லை. இலங்கை பந்து வீச்சில் லகிரு குமாரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றி இலக்காக 219 ரன்களை இலக்கு வைத்த இலங்கை அணி, நம்பிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. ரசிகர்கள் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இலங்கை அணியை அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், நம்பிக்கையை மீறி, தொடக்க வீரர் நிசாங்கா அபாரமாக விளையாடி 127 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிசாங்காவின் 124 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் கூடிய 127 ரன்கள் சிறப்பாக இருந்தது. இதேபோன்று குசல் மெண்டிஸ் 39 ரன்களும், ஏஞ்சலோ மேத்தீஸ் 32 ரன்களும் சேர்த்து இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பெற்ற டெஸ்ட் வெற்றியாதும். இதனைடுத்து, ஆறுதல் வெற்றியுடன் இலங்கை அணியினர் தாயகம் செல்கின்றனர்.
இங்கிலாந்து அணியாது, வெஸ்ட் இண்டீஸ் எதிராக மூன்று டெஸ்ட், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் என தொடர்ந்து ஐந்து டெஸ்டில் வெற்றி பெற்ற நிலையில், கடைசி டெஸ்டில் இலங்கை அணியானது இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.