இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்
அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நீர்பாசனம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் என அனைத்து விதமான அமைச்சுப் பதவிகளிலிருந்தும் ரொஷான் ரணசிங்க, நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தான் இவ்வாறு பதவி நீங்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்ததுடன், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் நிலவி வரும் நிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இததேவேளை, தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.