கோலி, பும்ரா, கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நீக்கம்.. ஒருநாள் தொடரில் வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி

வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.

கோலி, பும்ரா, கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நீக்கம்.. ஒருநாள் தொடரில் வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி

2025 ஐபிஎல் தொடருக்கு பின்னர் இங்கிலாந்தில் இரண்டு மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி செல்லவுள்ளதுடன்,  அந்த சுற்றுப்பயணம் முடிந்த இரண்டு வாரங்களில் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோருக்கு இடம் வழங்கப்படாது என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு மாதங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் என நீண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி வீரர்கள் விளையாடஉள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்க பிசிசிஐ தீர்மானம் எடுத்து உள்ளது.

எனவே, அடுத்து இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் வீரர்களை விளையாட வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே டெஸ்ட் அணியில் விளையாட உள்ள விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால், வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று இருக்கிறார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. இருந்தாலும், அவரது செயல்பாடு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக உள்ளது. 

அண்மையில், நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது சராசரி 6.20 என்ற அளிவில் மிக மோசமாக பேட்டிங் செய்த நிலையில், எனவே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 17, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.