முதலிடத்திற்கு முன்னேறிய சுப்மன் கில்.. சாரா டெண்டுல்கர் முத்தம் கொடுத்து பாராட்டு!
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் தனது சிறு வயது முதலே மிகவும் பிரபலம். சாரா டெண்டுல்கர் 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி மும்பையில் பிறந்தார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும், சாரா டெண்டுல்கரும் காதலித்து வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.
தற்போது, இதை நிரூபிக்கும் விதமாக சாரா டெண்டுல்கர் பதிவிட்ட எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம், ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 4வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்தது. இதையடுத்து, சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மேன் சுப்மன் கில் என குறிப்பிட்டு முத்தம் கொடுப்பது போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இதனால் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 1ம் தேதி மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவிற்கு வெளியே சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஒன்றாக இருந்தனர்.
இருப்பினும், இருவரும் தங்கள் உறவை பகிரங்கப்படுத்தவில்லை என்பதுடன், இவர்கள் இருவரும் காதலர்களா அல்லது நண்பர்களா என்பது இதுவரை தெரியவில்லை.