அடுத்த கேப்டன் இவர்தான்... சுனில் கவாஸ்கர் வெளியிட்ட தகவல்... ஆனால் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்?

இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, பும்ரா மட்டுமே, தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டார். 

அடுத்த கேப்டன் இவர்தான்... சுனில் கவாஸ்கர் வெளியிட்ட தகவல்... ஆனால் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்?

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கவாஸ்கர் பரிந்துரைத்த அந்த வீரரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தயங்கும் எனக் கருதப்படுகிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, பும்ரா மட்டுமே, தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டார். 

மற்ற பௌலர்கள் அனைவரும் சேர்ந்து, 40 விக்கெட்களை எடுத்த நிலையில், பும்ரா மட்டும், தனியொருவராக 31 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

இதனால், ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு ஜஸ்பரீத் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும், இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு பும்ராவைதான் கேப்டனாக நியமிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியை பும்ராவுக்குதான் கொடுக்க வேண்டும் என்றும், சில கேப்டன்கள், இதை செய், அதை செய் எனக் கூறி வீரர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவார்கள். ஆனால், பும்ரா அப்படி கிடையாது. வீரர்களுக்கு ஆலோசனைகள், பரிந்துரைகளை மட்டும்தான் வழங்குகிறார் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

விக்கெட்களை எடுப்பது எப்படி என்பது பும்ராவுக்கு தெளிவாக தெரிகிறது. இதனால், பந்துவீச்சாளர்களுக்கு அதற்கேற்றார்போல், ஆலோசனைகளை வழங்கி விக்கெட்களை வீழ்த்த உதவுகிறார். இதனால், பும்ரா கேப்டனாக செயல்படும் பட்சத்தில், அது அணிக்கு நல்ல பலனை கொடுக்கும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் கடைசி டெஸ்டில் ஜஸ்பரீத் பும்ரா கேப்டனாக செயல்பட்டபோது, அணி சிறப்பாக செயல்பட்டது. கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் பந்துவீச முடியவில்லை. 

பும்ரா அப்போது பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியா தோற்க கூட வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது இருக்கும் சூழ்நிலையில், பும்ரா மட்டுமே மூன்றுவிதமான இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு பார்மில் இருக்கிறார். 

ஒருவேளை பும்ராவுக்கு ஒருநாள், டெஸ்ட் கேப்டன் பதவியை கொடுத்தால், அவர் ரெகுலராக விளையாடும் நிலை ஏற்படும். இதனால், காயம் ஏற்பட்டு, நீண்ட காலத்திற்கு ஓய்வுக்கு செல்லும் நிலை கூட ஏற்படும். இதனால், பும்ராவை துணைக் கேப்டன் அந்தஸ்தில் மட்டுமே, வைத்திருக்க பிசிசிஐ விரும்பும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp