ரோகித்துடன் தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்த நரைன்!
சுனில் நரைன் இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சர்மா, ஷேன் வாட்சனுடன் தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
17ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறதுடன், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியதுடன், இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நரைன் சதமடித்து அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் விராட் கோலி..? வெளியான தகவல்
சுனில் நரைன் இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சர்மா, ஷேன் வாட்சனுடன் தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் மற்றும் சதம் அடித்த 3-வது வீரர் என்ற தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இவருக்கு முன்னதாக ரோகித் மற்றும் வாட்சன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ரோகித் சர்மா மும்பைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டும், கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக சதமும் அடித்துள்ளார்.
ஷேன் வாட்சன், ஐதராபாத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டும், சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சதமும் அடித்துள்ளார்.
சுனில் நரைன், பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதமும் அடித்துள்ளார்.