ரோகித், மேக்ஸ்வெல் சாதனை சமன் செய்த சூர்யகுமார்! டி20 போட்டியில் அதிரடி!
4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.
4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் சமன் செய்தது.
இந்த போட்டியில், 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்தார் இந்திய கேப்டன் சூர்யகுமார். அத்துடக், ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்ற சூர்யகுமார்.
அத்துடன், இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில், ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் உடன் தற்போது சூர்யகுமாரும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் போலவே ஆனால் 10 ஓவர்தான்.. பிசிசிஐ-யின் அதிரடி திட்டம் இதுதான்!
அதாவது, டி20 கிரிக்கெட்டில் இருவரும் தலா 4 சதங்களை அடித்துள்ள நிலையில், தற்போது சூர்யகுமாரும் 4 ஆவது சதத்தை அடித்து இருவரின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ,ரோகித் சர்மா 148 போட்டிகளில் விளையாடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 போட்டிகளில் பங்கேற்று 4 சதமும் அடித்துள்ளனர்.
ஆனால் சூர்யகுமார் 57 போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேக்ஸ்வெல் தன்னுடைய 4 சதங்களில் 3 சதங்களை மிடில் ஆர்டரில் இறங்கி அடித்திருந்த நிலையில், சூர்யகுமார் 4 சதங்களையும் மிடில் ஆர்டரில் இறங்கி அடித்துள்ளார்.