கேப்டன்சி இல்லை... ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

கேப்டன்சி இல்லை... ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், “எனக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் மும்பை அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக தான் விளையாடுகிறோம். 

தற்போது எனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நானும் ஹர்திக் பாண்டியாவும் களத்திற்கு உள்ளேவும் வெளியவும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்வோம்.

அக்சர் பட்டேலுக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் நீண்ட காலமாக இந்திய அணியில் இருக்கின்றார். ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி இல்லை என்றாலும் அவரும் அணியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார்.

அணியின் நிர்வாகக் குழுவில் ஹர்திக் உள்ளதுடன், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.

ஹர்திக் பாண்டியா களத்திலும் சரி, களத்திற்கு வெளியில் சரி எங்களுடன் தான் இருப்பார். எங்களுடைய அணியில் பல கேப்டன்கள் களத்தில் இருக்கிறார்கள். 

கம்பீர் ஒரு பயிற்சியாளராக எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். எப்போதுமே சிம்பிளாக இருப்பார். ஒரு வீரரின் மனதில் என்ன ஓடுகிறது என்று அவருக்கு நன்றாக தெரியும் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp