இந்த 2 பேர் தான் வெற்றிக்கு காரணம்.. பாராட்டிய சூர்யகுமார் யாதவ்!

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜஸ் பட்லர் அதிரடியாக 44 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் யாருமே 20+ ரன்களை அடிக்கவில்லை. 

இந்த 2 பேர் தான் வெற்றிக்கு காரணம்.. பாராட்டிய சூர்யகுமார் யாதவ்!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் துவங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜஸ் பட்லர் அதிரடியாக 44 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் யாருமே 20+ ரன்களை அடிக்கவில்லை. 

ஹேரி ப்ரூக் 17 (14), ஜோப்ரா ஆர்ச்சர் 12 (10) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்த நிலையில், இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 132/10 ரன்களை எடுத்தது.

வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்ற அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் சஞ்சு சாம்சன் 26 (20), அபிஷேக் சர்மா 79 (34) ஆகியோர் தொடர்ந்து அதிரடி காட்டியதுடன், தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் மூன்று பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆனார்.

அடுத்து திலக் வர்மா 19 (16) ரன்களை எடுத்த நிலையில்,  இந்திய அணி, 12.5 ஓவர்கள் முடிவில் 133/3 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

போட்டி முடிந்தப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘‘முதல் பந்தில் இருந்தே, இந்திய வீரர்களின் சுறுசுறுப்பு எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. அனைத்து பௌலர்களும், தங்களது திட்டத்தை மிகவும் சரியாக பயன்படுத்தினார்கள். 

வருண் சக்ரவர்த்தி, களநிலவரம் அறிந்து சிறப்பாக பந்துவீசினார். எந்த நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங், பொறுப்பை உணர்ந்து பந்துவீசுகிறார். 

இந்த இருவரும் முதல் 5 பேட்டர்களை வீழ்த்தி அசத்தியது, வெற்றிக்கு மிகமிக்கிய காரணம். தலைமை பயிற்சியாளர் கம்பீர், எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார்’’ என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp