தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவால் கூட செய்ய முடியாத சாதனை.. சூர்யகுமார் படைத்த சரித்திரம்!

கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி  சூர்யகுமார் யாதவ்.

தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவால் கூட செய்ய முடியாத சாதனை.. சூர்யகுமார் படைத்த சரித்திரம்!

இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே சாதனை படைத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி  சூர்யகுமார் யாதவ்.

இந்திய டி20 அணிக்கு கேப்டன்களாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வில் உள்ளனர். இந்த நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் இந்த டி20 தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்ற நிலையில் அதிக ரன் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இதன் மூலம், இந்திய அளவில் சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஆடிய முதல் போட்டியில் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...