இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. ரோகித் அதிரடி முடிவு... மாஸ்டர் பிளான் இதுதான்!

லீக் ஆட்டம் அனைத்தையும் அமெரிக்காவில் விளையாடிய  இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸில் விளையாடுகிறது.

இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. ரோகித் அதிரடி முடிவு... மாஸ்டர் பிளான் இதுதான்!

சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, பார்படாஸ் பகுதியில் ஆப்கானிஸ்தானை வியாழக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. 

லீக் ஆட்டம் அனைத்தையும் அமெரிக்காவில் விளையாடிய  இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸில் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் ஆப்கானிஸ்தானை விட இந்திய வீரர்களுக்கு விளையாடிய அனுபவம் உள்ளது. இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணியானது, பலம் வாய்ந்த நியூஸிலாந்து போன்ற அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

இரு அணிகளும் கடந்த ஜனவரி மாதம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், மூன்றாவது டி20 போட்டி சமனில் முடிவடைந்து சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது.

அதிலும் சமம் ஆக, இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட அதில் இந்தியா வெற்றி பெற்றதை யாராலும் மறக்க முடியாது.

இதனால் ஆப்கானிஸ்தானை கூட குறைத்து மதிப்பிட முடியாது என்ற நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும். 

இந்த சூழலில், ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், யாருக்கு பதிலாக கொண்டு வர வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஏன் என்றால் முகமது சிராஜ் போன்ற வேகப்பந்துவீச்சாளரை நீக்கி குல்தீப் யாதவை சேர்க்கலாமா அல்லது ஜடேஜா போன்ற அனுபவ வீரருக்கு பதிலாக சேர்க்கலாமா என்ற குழப்பம் காணப்படுகின்றது.

இதேபோன்று விராட் கோலி தொடக்க வீரராக தடுமாறி வரும் நிலையில் அவரை மூன்றாவது இடத்திற்கு அனுப்பலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அப்படி நடந்தால், தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்க கூடும் என்பதுடன், அவர் அணிக்குள் வந்தால் சிவம் துபேவுக்கு அணியில் இடம் இருக்காது. 

இதனால் இந்தியா என்ன மாதிரியான மாற்றங்களை செய்யப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp