அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்... வெளியேறியது ஆஸ்திரேலியா.!

ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்... வெளியேறியது ஆஸ்திரேலியா.!

கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேற்றியுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்த  ஆப்கானிஸ்தான் அணி, ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை அரை இறுதிக்கு  முன்னேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை நேற்று வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா 55 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

வங்கதேச அணி 12.1 ஓவரில் 116 ரன்கள் இலக்கை எட்டினால் அதிக நெட் ரன் ரேட் பெற்று ஆஸ்திரேலியாவை முந்தி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தாலும்,  முதல் 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து இருந்தது. 

ஆனால், அதன் பின் விக்கெட்களை இழக்கத் தொடங்கிய வங்கதேச அணி சரியாக 11.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. 

சில நிமிடங்கள் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

ஏற்கனவே அதிக விக்கெட்களை இழந்து இருந்த வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிஎல்.எஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்கானிஸ்தான் அணியானது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க உள்ளது. இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp