டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்குதான்... ரோகித் போட்ட மாஸ்டர் பிளான்!
ஊடக சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, கோலி அதிரடி காட்டினார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் இணைந்துதேர்வு செய்தனர்.
அத்துடன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்பட்டு வரும் நிறைய வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் குவிந்தது.
இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பிசிசிஐ செய்த தவறு... வார்னர் சொன்ன தகவல்!
அத்துடன், குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ள விராட் கோலி அணிக்கு தேவையா என்பது உள்ளிட்ட கேள்விகள் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்டது. இதற்கு எந்தவித பதிலும் சொல்லாத ரோகித் ஒரு சிரிப்புடன் முடித்துக்கொண்டார்.
இந்த நிலையில், ஊடக சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, கோலி அதிரடி காட்டினார்.
முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு கோலி ஆச்சரியம் தந்தார். இதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றிலேயே விராட் கோலி பவர் ப்ளேவில் முதல் முறையாக 4 சிக்ஸர்களை விளாசினார்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா இருவருமே நடப்பு ஐபிஎல் தொடரில் பெரியளவில் சோபிக்காமல் இருந்தனர். குறிப்பாக சூர்யகுமார் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார்.
ஆனால், தற்போது ஐதராபாத் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 102 ரன்களை விளாசியுள்ளார். ஹர்திக் பாண்டியா கடைசி 3 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இவை எல்லாத்தையும் விட ரோகித் தேர்வு செய்த 4 ஸ்பின்னர்கள் தான் ஐபிஎல்-ன் போக்கையே மாற்றி வருகின்றனர். குல்தீப் யாதவ் 8 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்துள்ளார். யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ஜடேஜா ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த வீரர்களின் திறமையை நன்கு அறிந்து வைத்துள்ள ரோகித் சர்மா, அதனை சரியாக பயன்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல மாஸ்டர் பிளானில் உள்ளதாக பார்க்கப்படுகின்றது.