10 வருட போராட்டத்தின் பின்னர்.. அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்கா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியான போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின.
ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இன்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கிற்கு முன்பு மழை குறுக்கிட்டு போட்டியை தாமதப்படுத்தியதால் தென் ஆப்ரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு 123ஆக குறைக்கப்பட்டு, போட்டியின் ஓவரும் 17ஆக குறைக்கப்பட்டது.
123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹென்ரிக்ஸ் (0), டி காக் (12) உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், வெஸ்ட் இன்டீஸ் அணி கடைசி நேரத்தில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டதால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.
வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியதன் மூலம் கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
பொறுமையாக களத்தில் நின்ற மார்கோ ஜென்சன், ஓபட் மெக்காய் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மிரட்டல் சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார்.
மழையால் போட்டி ரத்தானால் அரை இறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? விரிவான தகவல்!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்கா அணி 10 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.