இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்து.. தென்னாப்பிரிக்காவின் மாஸ்டர் பிளான்!
இந்த சூழலில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் ஷார்ட் பாலை போட்டாலே அதை அடிக்க முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறி விடுவார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி என்று பலம் வாய்ந்த இந்தியாவை இறுதிப்போட்டியில் இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தென்னாப்பிரிக்கா சமாளிப்பதற்காக மாஸ்டர் பிளானை வைத்து உள்ளது.
இந்த தொடரில் இந்தியா சிறந்த பேட்டிங் கொண்ட அணியாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவை பொருத்தவரையில் அவர்களுடைய பந்து வீச்சு தான் அந்த அணிக்கு கை கொடுத்திருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் ஷார்ட் பாலை போட்டாலே அதை அடிக்க முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறி விடுவார்கள்.
ரிஷப் பந்த், சிவம் துபே, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஷார்ட் பால் பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஷார்ட் பாலை அடித்து ஆட ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் புல் சாட்டை பயன்படுத்துவார்கள்.
ஆனால் புல் ஷாட் சில சமயம் பவுண்டரி லைனில் கேட்ச் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவின் டாப் வரிசை வீரர்களை ஷார்ட் பாலை போட்டு திணறடிக்க தென்னாப்பிரிக்கா திட்டம் தீட்டி உள்ளது.
இந்த நிலையில், இதனை எதிர்கொள்வதற்கு இந்திய அணி பிரத்தேக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் மேற்கிந்திய தீவுகள் ஆடு களத்தில் ஷார்ட் பாலை வீசுவது பெரிய அளவில் கை கொடுக்காது என்றும் ஒரு கருத்தும் நிலவுகிறது. இதனால் ஷார்ட் பால் குறித்து கவலைப்படாமல் இந்திய வீரர்கள் தைரியத்துடன் விளையாடினால் நிச்சயம் ரன்கள் குவிக்கலாம்.
நடக்கப்போகும் யுத்தத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.