அரையிறுதிக்கு ரோகித் சர்மா போட்டுள்ள மாஸ்டர் பிளான்... பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய பயிற்சி... நடந்த ட்விஸ்ட்!
பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி இதுவரை விளையாடிய 8 லீக் போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றனது.
இந்த நிலையில் சுப்மன் கில், பிரசித் கிருஷ்ணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா உள்ளிட்டோர் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பிரசித் கிருஷ்ணா இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று பார்க்கப்படுகிறது.
இதனை செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு.. எழுந்துள்ள கடும் சவால்!
அதேபோல் 2 பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் குல்தீப் யாதவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தலைமையில் சிராஜ் மற்றும் பும்ரா இருவருக்கும் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, பேட்டிங் செய்வதற்கு அதிக நேரம் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜடேஜாவுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசை முடிவடைவதால், பந்துவீச்சாளர்களுக்கும் பேட்டிங் செய்ய அவசியம் ஏற்படலாம் என்பதால் சிராஜ் மற்றும் பும்ராவுக்கு முன்கூட்டியே பேட்டிங் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.