அரையிறுதி போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டால் என்ன நடக்கும்? 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது. 

அரையிறுதி போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டால் என்ன நடக்கும்? 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது. 

இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காவது அணி எது என்று விரைவில் தெரிந்துவிடும். 

இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடினால் மும்பையில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் புதன்கிழமை விளையாடும். பாகிஸ்தானுடன் விளையாடுவதாக இருந்தால் வரும் வியாழக்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும். 

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டது. 
ஆனால் இம்முறை அப்படி ஒரு வசதி செய்யப்படவில்லை. இதனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தனால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அப்படியொரு தவறை மட்டும் செய்தால் அவ்வளவுதா.... இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜாம்பவான்!

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ சி சி, புள்ளி பட்டியலில் எந்த அணி அதிக ரன் ரேட் பெற்று முன்னிலையில் இருக்கிறதோ அது இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளது.

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் உள்ள இந்தியாவும் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்தும் அரையிறுதியில் மோதி மழையால் ஆட்டம் ரத்தனால் அதிக புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு செல்லும். 

அதனை போலவே, இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவும் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும் அரை இறுதி போட்டியில் மோதும் போது மழை குறுக்கிட்டால் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா இறுதி சுற்றுக்கு செல்லும். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp