ஐசிசி விதித்த தடையால் இலங்கை அணியால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா? தடை பின்னணியில் இவரா?

இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து,  இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிசி விதித்த தடையால் இலங்கை அணியால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா? தடை பின்னணியில் இவரா?

இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து,  இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு பிறகு தடை செய்யப்படும் அணி என்ற பெயரை இலங்கை இப்போது பெற்றுள்ளது. ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக இனி இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுமா என்பது குறித்து இலங்கை ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இலங்கை அணி தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் ஐசிசியிடம் இருந்து வரும் மாதாந்த உதவித்தொகை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கிடைக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ஐ.சி.சி

இந்தத் தடை எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தொடர்பில் நவம்பர் 18ஆம் திகதி நடைபெற உள்ள ஐசிசி யின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி வரும் டிசெம்பர் மாதம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் இந்த பிரச்சனைக்கு அதற்குள் தீர்வு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிம்பாப்வேக்கு தடை விதிக்கப்பட்ட போது அந்நாட்டில் நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டதை போல, இலங்கை அணி விடயத்தில் ஐசிசி அவ்வாறு முடிவெடுக்காது என கூறபடுகின்றது.

இலங்கை அணிக்கு தடை விதிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்தால் நீக்கப்பட்ட சம்மீ சில்வாதான், ஐசிசியின் இவ்வாறு நடவடிக்கை எடுத்ததற்கு காரண என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசாங்கம் கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டதை ஏற்றுக்கொள்ளாத சம்மீ சில்வா,  சர்வதேச கிரிக்கெட் சபையிடம் உடனடியாக இலங்கை கிரிக்கெட்டை சஸ்பெண்ட் செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் ஐசிசிஐ பொறுத்த வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக சம்மி சில்வாவை தான் அங்கீகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசாங்க தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாபவும், இதனால் இந்தப் பிரச்சனை முடிவடையவில்லை என்றால் இலங்கை கிரிக்கெட் அணி தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சிறப்பு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp