5 பேட்ஸ்மேன்களும் அதிரடி... உலககோப்பை வரலாற்றில் இந்தியா படைத்த மகத்தான சாதனை.. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

5 பேட்ஸ்மேன்களும் அதிரடி... உலககோப்பை வரலாற்றில் இந்தியா படைத்த மகத்தான சாதனை.. 

48 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு பாரிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு அணியும் தொடாத ஒரு மைல் கல்லை இந்தியா தொட்டிருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

கில் 51 ரன்களும், ரோகித் சர்மா 62 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு விளையாடிய விராட் கோலி 56 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ராகுலும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அபாரமாக விளையாடினர்.

இதன் மூலம் இந்திய அணி ஒரு புதிய ரெக்கார்டை படைத்திருக்கிறது. அதாவது உலகக் கோப்பை போட்டியில் களம் இறங்கிய ஐந்து பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதில் ஸ்ரேயாஸ் சதமாக மாற்றி இருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அரைசுதம் அடித்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

இத்தகைய சாதனையை முதல் இரண்டு முறையும் ஆஸ்திரேலியா அணி தான் படைத்திருக்கிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp