முக்கிய வீரர்கள் ஆறு பேரை திருப்பி அழைத்துள்ள ஆஸ்திரேலியா.. என்ன காரணம் தெரியுமா? 

இந்தியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

முக்கிய வீரர்கள் ஆறு பேரை திருப்பி அழைத்துள்ள ஆஸ்திரேலியா.. என்ன காரணம் தெரியுமா? 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிக்கொண்ட மகிழ்ச்சியில்  இந்தியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் இந்தியாவில் தங்கி விளையாடி வருவதால் தாங்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பதாகவும் தங்களால் முழு திறனுடன் விளையாடவில்லை என்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்களது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனையடுத்து, உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று டி20 தொடரில் விளையாடி வந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்மித், ஆடம்சம்பா, ஜோஸ் இங்கிலீஷ், சென் அப்பார்ட் போன்ற 6 வீரர்களை நாட்டிற்கு திரும்பி வர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. 

மூன்றாவது டி20யில் இந்திய அணியில் மாற்றம்? முக்கிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா?

எனினும், இறுதிப்போட்டியில் தூள் கிளப்பிய டிராவிஸ் ஹெட், தான் இந்தியாவில் தங்கி தொடரை முடித்துக் கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். இதனால் அவர் தொடர்ந்து விளையாட உள்ளார். 

இதேவேளை, மாற்று வீரர்களாக க்ரிஷ் கிரீன், ஜாஸ் ஃபிலிப்ஸ் பென் மெக்டர்மாட், பென் டுவார்சஸ் போன்ற வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மாற்றுவீராக களம் இறங்கிய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp