சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற்ற 7 அணிகள்.. வங்கதேசம் அணியின் கனவு நனவாகுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நிலையில் இந்தியாவும் நெதர்லாந்தும் இன்று பல பரிட்சை நடத்துகிறது. 

இதில் இந்திய அணி தோல்வியை தழுவினால் நெதர்லாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்த எட்டு அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. 

இந்த நிலையில் வங்கதேசத்துடனான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 14 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகள் உடன் 0.84 என்ற ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அத்துடன், நியூசிலாந்து அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், வங்கதேசம் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.

இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளதுடன், இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் எட்டாவது இடத்தில் உள்ள வங்கதேசம் அணி தன்னுடைய சாம்பியன்ஸ் கோப்பை கனவை தக்க வைத்துக் கொள்ளும். 

ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்க்கு செல்லும். கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp